KEJOHANAN OLAHRAGA MSSD HULU SELANGOR 2023

 

மேற்கண்ட ‘உலூ சிலாங்கூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி’ (KEJOHANAN OLAHRAGA MSSD HULU SELANGOR 2023) ஜூலை 31 தொடங்கி 4 ஆகஸ்டு, 2023 வரையில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தில் (UNIVERSITI SULTAN PENDIDIKAN IDRIS) இனிதே நடைப்பெற்றது. நம் பள்ளியைப் பிரதிநிதித்துச் சுமார் 16 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், குண்டு வீசுதல், 200மீட்டர் ஓட்டம், 1200மீட்டர் ஓட்டம், 4X200மீட்டர் ஓட்டம், 80மீட்டர் தடையோட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர். அவ்வகையில், 1200 மீட்டர் ஓட்டத்தில் நஜீரா முதலிடத்தைத் தக்கவைத்து நம் பள்ளிக்குப் பெருமையைச் சேர்த்து மாநில அளவிற்கும் (MSSS) தேர்வுப் பெற்றுள்ளார்.